கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை உட்பட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து, திறக்கப்படும் நீர் அளவும் அதிகரித்துள்ளது. அம்மம்பள்ளி அணை மற்றும் கேசவரம் அணைக்கட்டிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் 33 அடி நீர் உள்ளது, மொத்த கொள்ளளவு 35 அடி. நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ,…
