தளபதி கச்சேரி பாடல் வந்துவிட்டது – அனிருத் கொடுத்த அதிரடி கச்சேரி!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் களத்தில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் அவரின் அரசியல் பயணத்துக்கு இணையான ஒரு திரை வடிவம் போல் ரசிகர்கள் காண்கிறார்கள். இதனால் ஜனநாயகன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது….
