Home » Tamilnadu » Page 6
coimbatore car accident

கோவை அருகே விபத்து: 4 நண்பர்கள் பலி

கோவை: கோவை பேரூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற நான்கு நண்பர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிப்பாளையம் அருகே சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நொறுங்கியது. விபத்தின் தாக்கத்தில் கார் முழுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரபாகரன் (19) கடுமையாக காயமடைந்து…

முழுமையாகக் காண
Vijay's dramatic decision

விஜய் அதிரடி முடிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த துயரச்சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நடவடிக்கைகள் மந்தமாகி, அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தொடக்கத்தில், விஜய் விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்று தவெகவினர் தெரிவித்தனர். ஆனால் தற்போது திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல்…

முழுமையாகக் காண
கொசஸ்தலை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை உட்பட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து, திறக்கப்படும் நீர் அளவும் அதிகரித்துள்ளது. அம்மம்பள்ளி அணை மற்றும் கேசவரம் அணைக்கட்டிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் 33 அடி நீர் உள்ளது, மொத்த கொள்ளளவு 35 அடி. நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ,…

முழுமையாகக் காண
Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 10 கிலோ எடை கொண்ட, ரூ 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதற்காக, தாய்லாந்திலிருந்து வந்த ஒரு விமான பயணியின் உடைமைகள் சோதிக்கப்பட்டன. சோதனையின் போது சந்தேகமான வடமாநில இளைஞர் ஒருவர் குற்றசாட்டாக கண்டுபிடிக்கப்பட்டார். அந்த பயணியின் உடைமைகளை ஆய்வு செய்த போது, உணவு பாக்கெட்டுகளுக்குள் கஞ்சா மறைத்து கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் பின்னர், அந்த பயணி உடனடியாக கைது…

முழுமையாகக் காண
Ooty Train

ஊட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி – மீண்டும் மலை ரயில் சேவை!

உதகை: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின்…

முழுமையாகக் காண