யூ-டியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!
யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக…
