Home » Tamilnadu » Page 4
Ajith Kumar Interview

கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, இந்நிலையில் ஒரே ஒருவரை குறை கூறுவது தவறு என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “நம் அனைவருக்கும் பங்கு உண்டு” என குறிப்பிட்டார். கூட்டத்தை அதிகரிப்பதையே பெருமை என பார்க்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிரிக்கெட் போட்டிகளில் கூட்டம் கூடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் வருவதில்லை என எடுத்துக்கூறிய அவர்,…

முழுமையாகக் காண
Chennai - Ennore

எண்ணூர் கடற்கரையில் 4 மாணவிகள் நீரில் மூழ்கி சாவு

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் இன்று சோக சம்பவம் நடந்துள்ளது. கடலில் குளிக்க வந்த நான்கு கல்லூரி மாணவிகள் அலையில் சிக்கி மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் கடற்கரைக்கு வந்த மாணவிகள் தண்ணீரில் இறங்கி விளையாடியதாக தகவல். இந்த நிலையில், ஒருவரை கடல் அலை இழுத்துச் சென்றதால் அதிர்ச்சியடைந்த மற்ற மூவர் அவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கியுள்ளனர். அலை வேகம் அதிகமாக இருந்ததால், நான்கு பேரும் கடலில் சிக்கி கரையொதுங்கிய…

முழுமையாகக் காண
Karur Sampede CBI intensifies investigation

கரூர் துயரம்: சிபிஐ 3டி லேசர் ஆய்வில் விசாரணை தீவிரம்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. 41 பேரின் உயிரை காவுகொண்ட இந்த விபத்து நாட்டையே அதிர வைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்தான் துயரம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கரூருக்கு திரும்பி, சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை…

முழுமையாகக் காண
New depression in the Bay of Bengal

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை உருவாக வாய்ப்பு

அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இந்த தாழ்வு உருவாகும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வலுப்பெற்றால் குறைந்த காற்றழுத்தமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாற்றமுற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் மீனவர்கள்…

முழுமையாகக் காண
Woman tears up as she rescues her brother's bullet

போதை வழக்கு பைக்: கண்ணீருடன் தம்பி புல்லட் மீட்ட பெண்

கடலூரில் போதைப் பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை வாங்க வந்த ஒரு பெண்ணின் உணர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் பாசரசமாக்கியது. அந்த புல்லட் பைக் முன்பு அப்பெண் தனது தம்பிக்கு ஆசையாய் வாங்கிக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தம்பியின் நண்பர்கள் அது எடுத்துச் சென்றபோது கஞ்சா வழக்கில் சிக்கியதால் பைக் போலீஸ் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் ஏலம் நடைப்பெற்றது. பைக் ஏலத்திற்கு வரும்போது அப்பெண்…

முழுமையாகக் காண
Devar Jayanti

தேவர் ஜெயந்தி: ஆயுதத் தாண்டவம், வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மற்றும் பரமக்குடி பகுதிகளில் தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் மற்றும் அபாயகரமான முறையில் பயணித்த இளைஞர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். நெல்லையில், தேவர் ஜெயந்தி விழாவிற்கு வாகனங்களில் சென்ற குழுவினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி சென்றதாக போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை கைது செய்ததுடன் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பரமக்குடி அருகே பார்த்திபனூர் சோதனைச் சாவடியில் அரசுப் பேருந்துகள் மற்றும் கார்கள் மீது தொற்றியபடி கூச்சலிட்ட இளைஞர்களை…

முழுமையாகக் காண
gold price today

சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. தங்கம் வாங்க இதுவே சரியான நாள்!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியில் ஒரு சவரன் ரூ.90,600 வரை உயர்ந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து விலை வேகமாகக் குறைந்துள்ளது. இது தங்க நகை வாங்குவோருக்கு பெரிய நிம்மதி அளித்துள்ளது. இன்று காலை சந்தை தகவலின்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.225 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை…

முழுமையாகக் காண
நாமக்கல் கல்லூரி மாணவர்கள் உணவு விஷச்சம்பவம் – போலீஸ் விசாரணை

கல்லூரி உணவு விஷம்: மாணவர்கள் பாதிப்பு – உயிரிழப்பு வதந்தி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எக்செல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 128 மாணவர்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி மருத்துவமையம் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அனைத்து மாணவர்களும் தற்போது நலமாக உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, சமையல்…

முழுமையாகக் காண
TVK Vijay's next political decision

நவம்பர் 5ல் தவெக சிறப்பு கூட்டம் – விஜயின் அடுத்த அரசியல் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருந்த விஜய், சமீபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது பல்வேறு நிவாரண உறுதிமொழிகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில், தவெகவின்…

முழுமையாகக் காண
TVK Rajmohan

தலைமறைவு இல்லை – தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை, கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்தார். “நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, ஆனால் தலைமறைவாக இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் நடைபெற்ற தவெகாவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் தலைமறைவாக…

முழுமையாகக் காண