Home » rain
Rain in Tamilnadu

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு…

முழுமையாகக் காண
tamil-nadu-rainfall

புதிய காற்றழுத்த தாழ்வு: சென்னைக்கு மீண்டும் கனமழை அலர்ட்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இரவு 7 மணி வரை மிதமான மழை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் கடந்த நான்கு நாட்களாக வெயில் சூடு அதிகரித்து இருந்தது. இதனால் மழை குறைவாக…

முழுமையாகக் காண
New depression in the Bay of Bengal

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை உருவாக வாய்ப்பு

அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இந்த தாழ்வு உருவாகும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வலுப்பெற்றால் குறைந்த காற்றழுத்தமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாற்றமுற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் மீனவர்கள்…

முழுமையாகக் காண
Ind vs Aus T20 Cancel

IND vs AUS: மழை தடை! முதல் டி20 போட்டி ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 14 பந்துகளில் 19 ரன்கள், கில் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தனர். மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் வேகமாக விளையாடி 24 பந்துகளில்…

முழுமையாகக் காண
Cyclone Montha

மொந்தா புயல் நெருங்குகிறது – சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல்…

முழுமையாகக் காண
Rain and floods in Chennai today

சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை

அக்டோபர் 26: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

முழுமையாகக் காண
கொசஸ்தலை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை உட்பட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து, திறக்கப்படும் நீர் அளவும் அதிகரித்துள்ளது. அம்மம்பள்ளி அணை மற்றும் கேசவரம் அணைக்கட்டிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் 33 அடி நீர் உள்ளது, மொத்த கொள்ளளவு 35 அடி. நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ,…

முழுமையாகக் காண