சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை
அக்டோபர் 26: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
