Home » crime
Youth hacked to death

காவலர் குடியிருப்பில் கொடூரம் – இளைஞர் வெட்டிக்கொலை!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்றி வந்த தாமரைச் செல்வன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, தாமரைச் செல்வனுக்கும் எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தாமரைச் செல்வன், சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைச் செல்வன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

முழுமையாகக் காண
Man arrested in Delhi

விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய நபர் டெல்லியில் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. விடுதியில் வசிக்கும் மாணவிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ரவி பிரதாப் சிங், கடந்த சில நாட்களாக தப்பித்து வந்தார். அவரை டெல்லியில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளதாக கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரவி பிரதாப் சிங் மீது தகவல்…

முழுமையாகக் காண
Wife and Lover Kill Husband

குஜராத்தில் கணவனை கொன்ற மனைவி சமையலறையில் புதைத்த அதிர்ச்சி!

குஜராத் அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம்! கணவனை கொன்ற மனைவி உடலை சமையலறையில் புதைத்தது – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பீகாரை சேர்ந்த சமிர் அன்சாரி மற்றும் அவரது மனைவி ரூபி ஆகியோர் 2016ல் அகமதாபாத்தில் குடியேறினர். இருவரும் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை செய்து, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். சில மாதங்களாக சமிர் காணாமல் போனாலும், மனைவி ரூபி எந்த புகாரும் அளிக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அவர் வேறு இடத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார் என…

முழுமையாகக் காண
Government school teacher arrested in POCSO

அரசு பள்ளி ஆசிரியர் போக்ஸோ வழக்கில் கைது; மாணவிகள் புகார்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டினப்பள்ளி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் பணியாற்றும் அரசு ஆசிரியர் முருகேசன் மீது மாணவிகள் பலர் குற்றச்சாட்டு முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவிகள் அளித்த புகாரில், ஆசிரியர் அவர்கள் மீது தவறான நடத்தை மேற்கொண்டதாக புகார் பெட்டியில் எழுதி வைத்திருந்தனர். ஆனால் அந்த புகாரை தலைமை ஆசிரியர் கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல் பெற்றோரிடம் சென்றதும், அவர்கள் கடும் கோபம் அடைந்தனர். பள்ளிக்கு திரண்டு…

முழுமையாகக் காண
3 people shot and arrested

கோவை கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம்.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு

கோவை விமான நிலையம் அருகே கார் நிறுத்தி பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை, மதுபோதையில் இருந்த 3 பேர் தாக்கி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. வெளிச்சமில்லா பகுதி என்பதை குறிவைத்து…

முழுமையாகக் காண
friend killed in drunken argument

மதுபோதையில் தகராறு: நண்பர் கொலை, ஓட்டுநர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் திருமால்நகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகிழ்ச்சி நகரை சேர்ந்த செல்வம், அவரது நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி அருகிலுள்ள கோழி இறைச்சி கடை முன்பு அமர்ந்து மது அருந்தியதாக விசாரணையில் தெளிவாகியுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சுற்றித்திரிந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மது அருந்தும் போதே…

முழுமையாகக் காண
Coimbatore Student Rape

கோவை மாணவி வன்கொடுமை: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவையில் கல்லூரி மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு ஆண் நண்பருடன் இருந்த மாணவியை மூவர் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர்கள் முதலில் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி படுகாயப்படுத்தினர். பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த இளைஞர் போலீசில் அளித்த தகவலின் பேரில் மாணவி மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

முழுமையாகக் காண
Ambur Youth Arrested

ஆம்பூர் ரயில் பயணிகளிடம் கொள்ளை: இளைஞர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் பயணிகளை குறிவைத்து செல்போன் மற்றும் தங்கச் செயின்களை பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பரமேஷ் எனப்படும் 19 வயது இளைஞர், ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதை பகுதிகளில் பயணிகளை திடீர் தாக்குதலுக்கு உள்ளாக்கி பொருட்களை பறித்து தப்பிப்பதாக போலீசார் தெரிவித்தனர். சமீப நாட்களில் தொடர்ச்சியான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஆம்பூர் போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடத்தி சந்தேக நபரை தடயவியல் ஆதாரங்களுடன் கைதுசெய்தனர். பரமேஷ் சிறு…

முழுமையாகக் காண
printing counterfeit notes

யூ-டியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக…

முழுமையாகக் காண
ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி

ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி – ‘டிஜிட்டல் கைது’ கும்பல் சிக்கியது!

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று மிரட்டி, 29.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மூவர் கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் (61) கோவை மசக்காளிபாளையத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு செய்து, “உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது, எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று…

முழுமையாகக் காண