Home » chennai
Rain in Tamilnadu

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு…

முழுமையாகக் காண
Landslide during stormwater canal work

மழைநீர் கால்வாய் பணியில் மண் சரிவு – குடிசை வீடுகள் பிளவு!

சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகள் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சாலையில் பள்ளம் தோண்டும் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பதினான்கரை அடி அகலத்தில் கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தோண்டப்பட்ட பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், அருகிலுள்ள குடிசை வீடுகள் பாதிப்புக்குள்ளன. மண் சரிவின் தாக்கம் காரணமாக அந்த வீடுகளின் சுவரில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன….

முழுமையாகக் காண
tamil-nadu-rainfall

புதிய காற்றழுத்த தாழ்வு: சென்னைக்கு மீண்டும் கனமழை அலர்ட்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இரவு 7 மணி வரை மிதமான மழை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் கடந்த நான்கு நாட்களாக வெயில் சூடு அதிகரித்து இருந்தது. இதனால் மழை குறைவாக…

முழுமையாகக் காண
Chennai - Ennore

எண்ணூர் கடற்கரையில் 4 மாணவிகள் நீரில் மூழ்கி சாவு

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் இன்று சோக சம்பவம் நடந்துள்ளது. கடலில் குளிக்க வந்த நான்கு கல்லூரி மாணவிகள் அலையில் சிக்கி மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் கடற்கரைக்கு வந்த மாணவிகள் தண்ணீரில் இறங்கி விளையாடியதாக தகவல். இந்த நிலையில், ஒருவரை கடல் அலை இழுத்துச் சென்றதால் அதிர்ச்சியடைந்த மற்ற மூவர் அவரை காப்பாற்ற தண்ணீரில் இறங்கியுள்ளனர். அலை வேகம் அதிகமாக இருந்ததால், நான்கு பேரும் கடலில் சிக்கி கரையொதுங்கிய…

முழுமையாகக் காண
New depression in the Bay of Bengal

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை உருவாக வாய்ப்பு

அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இந்த தாழ்வு உருவாகும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வலுப்பெற்றால் குறைந்த காற்றழுத்தமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாற்றமுற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் மீனவர்கள்…

முழுமையாகக் காண
Cyclone Montha

மொந்தா புயல் நெருங்குகிறது – சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல்…

முழுமையாகக் காண
Rain and floods in Chennai today

சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை

அக்டோபர் 26: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

முழுமையாகக் காண
Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 10 கிலோ எடை கொண்ட, ரூ 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதற்காக, தாய்லாந்திலிருந்து வந்த ஒரு விமான பயணியின் உடைமைகள் சோதிக்கப்பட்டன. சோதனையின் போது சந்தேகமான வடமாநில இளைஞர் ஒருவர் குற்றசாட்டாக கண்டுபிடிக்கப்பட்டார். அந்த பயணியின் உடைமைகளை ஆய்வு செய்த போது, உணவு பாக்கெட்டுகளுக்குள் கஞ்சா மறைத்து கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் பின்னர், அந்த பயணி உடனடியாக கைது…

முழுமையாகக் காண