Home » விளையாட்டு
Ind vs Aus T20 Cancel

IND vs AUS: மழை தடை! முதல் டி20 போட்டி ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 14 பந்துகளில் 19 ரன்கள், கில் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தனர். மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் வேகமாக விளையாடி 24 பந்துகளில்…

முழுமையாகக் காண
Ruduraj & Pritvi Shah

ருதுராஜின் நெகிழ்ச்சி செயல்: ஷாவுடன் விருது பகிர்வு!

ரஞ்சி டிராபி தொடரில் சண்டிகர் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் பிரித்வி ஷா அபாரமான ஆட்டம் வெளிப்படுத்தி இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இருப்பினும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிஎஸ்கே கேப்டனும் மகாராஷ்டிரா அணியின் தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது. பிரித்வி ஷா இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 141 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து, ரஞ்சி டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிவேக இரட்டைச் சதம் எனும் பெருமையை பெற்றார். அவர் மொத்தமாக 222 ரன்கள்…

முழுமையாகக் காண
Ind vs Aus T20

இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டி20 – எத்தனை மணிக்கு? எங்கே பார்க்கலாம்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (அக்டோபர் 29) நடைபெற உள்ளது. இந்தப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும், எந்த மைதானத்தில் நடக்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் காணலாம் என்பதை இங்கே பார்க்கலாம். அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை…

முழுமையாகக் காண
Shreyas Iyer admitted to ICU

ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி – உடல்நிலை கவலைக்கிடம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை டைவ் அடித்து பிடிக்க முயன்றபோது, தரையில் கடுமையாக மோதியதில் அவரது விலா எலும்புப் பகுதியில் பலத்த அடிபட்டது….

முழுமையாகக் காண
brook_record

சரிவில் சதம்! புரூக்கின் ஹீரோயிக் இன்னிங்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே கடுமையான அதிர்ச்சியை சந்தித்தது. வெறும் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அணியின் தோல்வி நிச்சயம் என ரசிகர்கள் எண்ணிய நேரத்தில், கேப்டன் ஹாரி புரூக் தனி ஒருவராக அணியை காப்பாற்றும் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப்…

முழுமையாகக் காண
Rohit Sharma & Virat Kohli

சிட்னியில் கோலி–ரோஹித் புயல்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் இரு துருவ நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, அபாரமான 168 ரன்கள் கூட்டணியை அமைத்து இந்தியாவுக்கு வெற்றியை உறுதிசெய்தனர். இந்த இணைப்பு பல சாதனைகளையும் முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த கூட்டணிகள் பட்டியலில், ரோஹித் – கோலி ஜோடி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 5,375 ரன்களுக்கு…

முழுமையாகக் காண
IND vs AUS

இந்தியா vs ஆஸ்திரேலியா – 3வது ஒருநாள் போட்டிக்கு மழை தடையாகாது!

சிட்னி: நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை வாய்ப்பு இல்லை, வானிலை மிதமான சூரிய வெளிச்சத்துடன் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை 16°C முதல் 25°C வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் தோல்வி கண்ட இந்திய அணி, நாளைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள்…

முழுமையாகக் காண