டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு விலையுயர்ந்த பரிசு!
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‛டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் ₹90 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை ஏற்படுத்தியது. இதனால், இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான் விலையுயர்ந்த பிஎம்டபுள்யூ கார் ஒன்றை…
