Parcel arrived in human hands instead

மருந்துக்கு பதில் மனித கைகள் வந்த அதிர்ச்சி பார்சல்!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பெண் ஒருவர் மருந்துகளை ஆர்டர் செய்த நிலையில், அச்சு பை போன்ற பார்சலில் மனித கைகள் டெலிவரி ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஹோப்கின்ஸ்வில்லே பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு கூரியர் மூலம் பார்சல் வந்துள்ளது. அதைத் திறந்தபோது, அதில் ஐஸ் பேக்கில் பாதுகாக்கப்பட்ட மனித கைகள் இருந்ததை அவர் கண்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு…

முழுமையாகக் காண
Earthquake hits Afghanistan

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்: பலி, காயம் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக அளக்கப்பட்ட இந்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் பதிவாகி, பல இடங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென நிலம் அதிர்ந்ததால் மக்கள் வீதிகளில் கூட்டமாக தஞ்சம் புகுந்தனர். முதல் கட்ட தகவலின்படி, இந்த பேரலை காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில கட்டிடங்கள் முழுமையாக இடிந்து, பிற பகுதிகளில் சாலை மற்றும்…

முழுமையாகக் காண
Venezuela inflation

வெனிசுலா பணவீக்கம்: லாரியில் பணம் மழை பொழிந்த இளைஞர்!

வெனிசுலாவில் கடுமையான பணவீக்கம் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழலில், ஒரு இளைஞர் லாரியில் பெட்டி பெட்டியாக பணத்தை எடுத்து வந்து சாலையில் அள்ளி வீசிய காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் மழை போல கொட்டியதை கண்டு மக்கள் உற்சாகத்துடன் சேகரித்தனர். வெனிசுலா ஒருகாலத்தில் வளமிக்க நாடாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் கட்டுக்குள் வராமல் தீவிர பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. தற்போது 1 இந்திய ரூபாய் = 1381 வெனிசுலா போலிவர்ஸ் என்ற…

முழுமையாகக் காண
Israel & Gaza War

இஸ்ரேல் அதிரடி: காசாவில் வெடித்த குண்டுகள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு புதிய தாக்குதல்களை நடத்துமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் காசா பகுதியில் நேற்று இரவு தொடங்கி வெடிச்சத்தங்கள் இடைவிடாமல் கேட்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்த சில நாட்களிலேயே இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த சில அறிவுறுத்தல்களை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதைத்…

முழுமையாகக் காண
திரிசூல்

முப்படை போர்பயிற்சி அறிவிப்பு – பாகிஸ்தான் வான்வெளி மூடல்!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பின், மீண்டும் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை, மொத்தம் 12 நாட்கள் நீடிக்கும் ‘திரிசூல்’ முப்படை போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘திரிசூல்’ என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் சேர்ந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி ஆகும். இந்த…

முழுமையாகக் காண
குனார்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் ‘செக்’ – குனார் ஆற்றில் அணை கட்டும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி அளித்த தாலிபான், இருநாடுகளுக்குமிடையே உறவை மேலும் கடுமையாக்கியுள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்தாலும், எல்லை பகுதியில் நிலைமை சீராகவில்லை. இதன் பின்னணியில், தாலிபான் அரசு பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் உச்சத் தலைவர் மவ்வலி ஹிபதுல்லா அகுண்ட்சாடா, குனார் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் பணியை உடனடியாகத் தொடங்க…

முழுமையாகக் காண