கார் வெடிப்பு தீவிரவாத தாக்குதல் – மத்திய அமைச்சரவை உறுதி!
சமீபத்தில் நடந்த டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தி, அதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்….
