Rajini & Kamal film

சுந்தர் சி ஏன் விலகினார்? – ரஜினி படத்திலிருந்து வெளியேற காரணம்!

ரஜினிகாந்த் – கமல் ஹாசன் கூட்டாணியில் உருவாக உள்ள தலைவர் 173 படம் முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் சில நாட்களிலேயே சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுந்தர் சி முதலில் ஜாலியான, லைட்-ஹார்ட்டட் கதையை ரஜினிக்கு சொன்னதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ரஜினி அந்தக் கதையை விரும்பியிருந்தாலும், பின்னர் மாஸ் எலிமெண்ட்ஸ் அதிகமாக உள்ள…

முழுமையாகக் காண
Venkat Prabhu's Party

7 ஆண்டுகள் பிறகு வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம் ரிலீஸுக்கு ரெடி!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த ‘பார்ட்டி’ திரைப்படம் இறுதியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ஆம் ஆண்டிலேயே படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் முடிந்திருந்தாலும், நிதி சிக்கல்களால் படம் தாமதமானது. இதனால் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்டிரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்….

முழுமையாகக் காண
Bomb threat to Ajith's house

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிரடி சோதனை!

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது நடிகர் அஜித்தின் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், நடிகர் அஜித், எஸ்.வி. சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அஜித் வீட்டை சுற்றி முழுமையான சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பகுதியிலும்…

முழுமையாகக் காண
Jana Nayagan - Thalapathy Kacheri

தளபதி கச்சேரி பாடல் வந்துவிட்டது – அனிருத் கொடுத்த அதிரடி கச்சேரி!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் களத்தில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் அவரின் அரசியல் பயணத்துக்கு இணையான ஒரு திரை வடிவம் போல் ரசிகர்கள் காண்கிறார்கள். இதனால் ஜனநாயகன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது….

முழுமையாகக் காண
Rajini & Kamal film

ரஜினி-கமல் படம்: இயக்குனர் இவர்தான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் இரு தலைசிறந்த நட்சத்திரங்கள் ரஜினி-கமல் இணையும் படம் குறித்து ரசிகர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்தனர். சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் இதை உறுதி செய்திருந்தார். அப்போது அவர், “ரஜினியுடன் இணையும் படம் எப்படி இருக்கப் போகிறது என பொறுத்திருந்து பாருங்கள்” என கூறியிருந்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் பின்னர் நெல்சன் தான் இயக்குவார் எனவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அதிர்ச்சியாக புதிய…

முழுமையாகக் காண
AK 65 Update

அஜித் 65வது படம் குறித்து புது அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்குனரா?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக விளங்கும் அஜித், தன் 63வது படமான “குட் பேட் அக்லி” மூலம் ரசிகர்களை மீண்டும் மெய்மறக்க வைத்துள்ளார். தற்போது AK-64 படம் பான்-இந்தியா அளவில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் அஜித்துடன் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் 65வது பட இயக்குனர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது….

முழுமையாகக் காண
AK 64 Mass Update

இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைகிறார்களா? – AK 64 மாஸ் அப்டேட்

‘குட் பேட் அக்லி’ வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாருடன் சேர்ந்து AK 64 படத்தை இயக்க உள்ளார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அனிருத் இசையமைக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த திட்டத்திற்காக நடிகர் அஜித் குமார் சுமார் ரூ.183 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. AK 64 படத்தின் சமீபத்திய அப்டேட்டாக, இப்படத்தில்…

முழுமையாகக் காண
Madhampatti Rangaraj's second marriage

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் ஒப்புதல்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததையும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடையதென்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படும் இந்த இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை கிரிஸில்டா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரங்கராஜ் தன்னை ஏமாற்றினார் என குற்றம் சாட்டினார். அதனை அடுத்து காவல் துறையிலும் புகார் அளித்திருந்தார். விசாரணை நேரத்தில் கிரிஸில்டா, ரங்கராஜுடன்…

முழுமையாகக் காண
Pooja Hegde's new film with dhanush

பூஜா ஹெக்டே புதிய படம்: விஜய்க்குப் பிறகு தனுஷுடன் ஜோடி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய வாய்ப்புகளை பெற்றுவரும் பூஜா ஹெக்டே, தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலில் வெளியாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். இதே நேரத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு பெரிய திட்டங்களுக்குப் பிறகு,…

முழுமையாகக் காண
Parasakthi Update

பராசக்தி பர்ஸ்ட் சிங்கிள்: ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க, ஸ்ரீலீலா கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தி திணிப்பு பின்னணியில் கதை நகரும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்த…

முழுமையாகக் காண