admin

Home » Archives for admin » Page 3
TVK Vijay's next political decision

தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. மனு: பொது சின்னம் ஒதுக்க கோரிக்கை!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முக்கியமான அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் ஒரே அடையாள சின்னத்துடன் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தலைமை தீர்மானம் எடுத்துள்ளது. இதனையடுத்து, த.வெ.க. சார்பில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் ஒதுக்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் கட்சி தனித்த அடையாளத்துடன் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. த.வெ.க. தரப்பில் 10 வித்தியாசமான…

முழுமையாகக் காண
Gold rate today

சென்னையில் தங்கம் விலை பாய்ந்தது! சவரனுக்கு ரூ.1760 உயர்வு!

தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.220 உயர்ந்து தற்போது ரூ.11,700 என்ற அளவில் உள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்ட நுகர்வோர் சிலர் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. தங்க விலை ஏற்றம் காரணம் என்ன? உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும்,…

முழுமையாகக் காண
Delhi Car Blast

டெல்லி i20 கார் வெடி விபத்து: தீவிரவாத இணைப்பா? போலீஸ் தீவிர விசாரணை!

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் அதிர்ச்சி! டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் வெள்ளை நிற Hyundai i20 கார் வெடி விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் கடுமையாக காயமடைந்துள்ளனர். வாகன எரிவாயு டேங்க் காரணமா? ஆரம்ப விசாரணையில், காரின் பின்புற எரிவாயு டேங்க் வெடித்தது தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் வெடிப்பு வலிமை மற்றும் சேதத்தின் அளவு காரணமாக இது சாதாரண…

முழுமையாகக் காண
Youth hacked to death

காவலர் குடியிருப்பில் கொடூரம் – இளைஞர் வெட்டிக்கொலை!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்றி வந்த தாமரைச் செல்வன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, தாமரைச் செல்வனுக்கும் எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தாமரைச் செல்வன், சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைச் செல்வன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

முழுமையாகக் காண
Shock in a car parked behind Tasmac

டாஸ்மாக் பார் பின் நின்ற காரில் அதிர்ச்சி – போலீசார் கண்டது என்ன?

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள டாஸ்மாக் பாரின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரில் 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியளித்தது. கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பின் நின்றிருந்த வாகனங்களில் அதிக அளவில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மூவரை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் சிவகங்கை…

முழுமையாகக் காண
Tamil Nadu-Kerala Omni buses

தமிழகம்–கேரளா ஆம்னி பேருந்துகள் ரத்து!

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 600-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்திற்குள் மட்டுமே பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கேரள போக்குவரத்து துறை, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை சாலைவரி கட்டாததால் சிறைப்பிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இதேபோன்று, கர்நாடக துறையும் கடந்த வாரம் தமிழக பஸ்களுக்கு…

முழுமையாகக் காண
Man arrested in Delhi

விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய நபர் டெல்லியில் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. விடுதியில் வசிக்கும் மாணவிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ரவி பிரதாப் சிங், கடந்த சில நாட்களாக தப்பித்து வந்தார். அவரை டெல்லியில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளதாக கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரவி பிரதாப் சிங் மீது தகவல்…

முழுமையாகக் காண
Jana Nayagan - Thalapathy Kacheri

தளபதி கச்சேரி பாடல் வந்துவிட்டது – அனிருத் கொடுத்த அதிரடி கச்சேரி!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் களத்தில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் அவரின் அரசியல் பயணத்துக்கு இணையான ஒரு திரை வடிவம் போல் ரசிகர்கள் காண்கிறார்கள். இதனால் ஜனநாயகன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது….

முழுமையாகக் காண
Vijay-Ajithkumar

விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை – நடிகர் அஜித் குமார் விளக்கம்!

நடிகர் அஜித் குமார், தனது சமீபத்திய பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், தாம் எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த ஆங்கில பேட்டியில், கரூர் கூட்ட நெரிசல் விபத்தைப் பற்றி அவர் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் அதை விஜய்க்கு எதிரானதாகவும், சிலர் ஆதரவாகவும் கூறினர். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைக்கு அஜித் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் கூறியதாவது, “என் பேட்டி இளைஞர்களுக்கு நல்ல…

முழுமையாகக் காண
Government bus driver arrested

பழங்குடியின பெண்களிடம் அத்துமீறிய அரசு பேருந்து ஓட்டுநர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பழங்குடியின பெண்களிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை இரவு, அந்த நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த பழங்குடியின பெண்கள் மீது ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்ததால், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பெண்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார்…

முழுமையாகக் காண