admin

Home » Archives for admin
gold price today

சவரனுக்கு ரூ.1,800 குறைவு.. தங்கம் வாங்க இதுவே சரியான நாள்!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவை சந்தித்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியில் ஒரு சவரன் ரூ.90,600 வரை உயர்ந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து விலை வேகமாகக் குறைந்துள்ளது. இது தங்க நகை வாங்குவோருக்கு பெரிய நிம்மதி அளித்துள்ளது. இன்று காலை சந்தை தகவலின்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.225 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை…

முழுமையாகக் காண
நாமக்கல் கல்லூரி மாணவர்கள் உணவு விஷச்சம்பவம் – போலீஸ் விசாரணை

கல்லூரி உணவு விஷம்: மாணவர்கள் பாதிப்பு – உயிரிழப்பு வதந்தி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எக்செல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 128 மாணவர்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி மருத்துவமையம் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அனைத்து மாணவர்களும் தற்போது நலமாக உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, சமையல்…

முழுமையாகக் காண
Ind vs Aus T20 Cancel

IND vs AUS: மழை தடை! முதல் டி20 போட்டி ரத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 14 பந்துகளில் 19 ரன்கள், கில் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தனர். மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் வேகமாக விளையாடி 24 பந்துகளில்…

முழுமையாகக் காண
TVK Vijay's next political decision

நவம்பர் 5ல் தவெக சிறப்பு கூட்டம் – விஜயின் அடுத்த அரசியல் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருந்த விஜய், சமீபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது பல்வேறு நிவாரண உறுதிமொழிகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நேரத்தில், தவெகவின்…

முழுமையாகக் காண
TVK Rajmohan

தலைமறைவு இல்லை – தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்!

கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை, கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்தார். “நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, ஆனால் தலைமறைவாக இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் நடைபெற்ற தவெகாவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் தலைமறைவாக…

முழுமையாகக் காண
Ruduraj & Pritvi Shah

ருதுராஜின் நெகிழ்ச்சி செயல்: ஷாவுடன் விருது பகிர்வு!

ரஞ்சி டிராபி தொடரில் சண்டிகர் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் பிரித்வி ஷா அபாரமான ஆட்டம் வெளிப்படுத்தி இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இருப்பினும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிஎஸ்கே கேப்டனும் மகாராஷ்டிரா அணியின் தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது. பிரித்வி ஷா இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 141 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து, ரஞ்சி டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிவேக இரட்டைச் சதம் எனும் பெருமையை பெற்றார். அவர் மொத்தமாக 222 ரன்கள்…

முழுமையாகக் காண
printing counterfeit notes

யூ-டியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் கைது!

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக…

முழுமையாகக் காண
Aadhar Card New Rules

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய ரூல்ஸ் – UIDAI முக்கிய அறிவிப்பு!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது. UIDAI…

முழுமையாகக் காண
Israel & Gaza War

இஸ்ரேல் அதிரடி: காசாவில் வெடித்த குண்டுகள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு புதிய தாக்குதல்களை நடத்துமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் காசா பகுதியில் நேற்று இரவு தொடங்கி வெடிச்சத்தங்கள் இடைவிடாமல் கேட்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்த சில நாட்களிலேயே இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த சில அறிவுறுத்தல்களை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதைத்…

முழுமையாகக் காண
Ind vs Aus T20

இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டி20 – எத்தனை மணிக்கு? எங்கே பார்க்கலாம்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (அக்டோபர் 29) நடைபெற உள்ளது. இந்தப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும், எந்த மைதானத்தில் நடக்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் காணலாம் என்பதை இங்கே பார்க்கலாம். அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை…

முழுமையாகக் காண