Home » அஜீத்தின் புதிய படத்தை இயக்கும் விஜய் – ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி!

அஜீத்தின் புதிய படத்தை இயக்கும் விஜய் – ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி!

Ajith's new film

இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமான குட் பேட் அக்லிக்கு பிறகு நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் பிஸி ஆகா இருக்கிறார். அவர் நடிக்கும் AK 64 படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் இயக்குகிறார் இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2026 பிப்ரவரி மாதம் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு தனது ரேஸிங் திறமையே உலகிற்கு காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார், இவருக்குச் சமீபத்தில் 2025 ஆண்டிற்கான சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டது. தற்போது நடிகர் அஜித்குமார் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்ல் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் அஜித்தின் ரேஸிங் குறித்து ஆவணப்படம் வெளியாகவுள்ளது, இதனை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்குகிறார். இவர் நடிகர் அஜித்குமாரை வைத்து முன்பு கிரீடம் என்ற படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் இந்தச் செய்தியை அறிந்ததும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பூஜா ஹெக்டே புதிய படம்: விஜய்க்குப் பிறகு தனுஷுடன் ஜோடி!