நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர் ஷர்புதீன், ஞானேஸ்வரன், சரத் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் எல்தாமஸ் சாலையில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து ரூபாய் 27 லட்சம் பணம், ஐபோன்கள் மூன்று, மற்றும் சொகுசு கார் போன்றவற்றை போலீசார் அவர்கள் கைப்பற்றினர்.
ஷர்புதீன் அவரது வீட்டில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஹவுஸ் பார்ட்டியில் கொக்கெய்ன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கலாம். மற்றும் சில சினிமா பிரபலங்கள் பங்கேற்றார்கள் எனவும் சந்தேகிக்கின்றார்கள் போலீசார்.
இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்த இளம் நடிகைகள், பெண்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 18 பேரிடம் போலீசார் விசாரணையை தீவிர படுத்த திட்டமிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஷர்புதீன் என்பவர் சிம்புவின் மேனேஜராக பணிபுரிந்துள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். போதைப் பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி வரும் ஞானேஸ்வரனையும் போலீசார் கண்காணித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் ஷர்புதீன் அவர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
