திமுக நடத்தும் “அறிவுத் திருவிழா” குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பவள விழா பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது” என்று தொடங்கி, திமுகவை விஜய் மறைமுகமாக தாக்கியுள்ளார்.
அறிவுத் திருவிழா என்ற பெயரில் முழுக்க முழுக்க அரசியல் விமர்சன மேடையாக மாறிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார். இதனால் அந்த விழா உண்மையில் “அவதூறுத் திருவிழா” ஆகிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவோம் என்றும், அவர்களின் உண்மை முகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உணரச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த கடும் விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் இந்த அறிக்கை, வரவிருக்கும் தேர்தலுக்கான புதிய அரசியல் வெப்பத்தை உருவாக்கியுள்ளது.
