டி20 2026 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று முதல் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியே சந்தித்தது. இதனிடையே ஹர்த்திக் பாண்டிய முன்னரே பேட்டிங் செய்ய வரவேண்டும் என முன்னால் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
சூப்பர் 8 முதல் போட்டியில் இந்தியா அணி தவறான முடிவுகளை மேற்கொண்டு தடுமாறி தோல்வி பெற்றது, குறிப்பாக வாஷிங்டன் சுந்தரை முன்னதாக பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார், அந்திட்டம் பலனளிக்கவில்லை.
கிரிக்கெட் குறித்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே இதை பற்றி கூறியுள்ளார், சவுத் ஆப்பிரிக்கா போட்டியில் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையில் வேறு புதிய பேட்ஸ்மேனை பரிசோதனை செய்வதற்கு பதிலாக அணியில் உள்ள அனுபவமிக்க ஹர்திக் பாண்டியவை பயன்படுத்துவது சரியான முடிவு என அவர் குறியிள்ளார். இனி வரப்போகும் அடுத்த போட்டிகளில் இந்த ஆலோசனையை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிதித்தார்.
இந்தியா அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 7 மணிக்கு இந்தியா அணி ஜிம்பாவே அணியே எதிர் கொள்ளப்போகிறது.
