கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு மழை பெய்துள்ளது.
டிட்வா புயல் காரணமாகப் பெய்த மழையால் வடசென்னை பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. புழல் ஏரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரைகள் வலுவிழந்து தண்ணீர் மாதாவரம், செங்குன்றம், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
