Home » அலுவலக பேனரை மாற்றிய செங்கோட்டையன் – காரிலும் த.வெ.க!

அலுவலக பேனரை மாற்றிய செங்கோட்டையன் – காரிலும் த.வெ.க!

TVK - Vijay & Sengottaiyan

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்ஜிஆர் ஜெயலலிதா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்களை மாற்றியுள்ளார் செங்கோட்டையன்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்கள் தனது எம்எல்ஏ பதவியை நவம்பர் 26 ஆம் தேதி ராஜினாமா செய்து நேற்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் வைத்துச் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார்.

இது நேற்று தமிழக முழுவதும் பேசும் பொருளானது. இதனைத் தொடர்ந்து இன்று தனது அலுவலகத்தின் பேனர் மற்றும் கார்களில் த.வெ.கக்கொடியை மாற்றியுள்ளார் செங்கோட்டையன் அவர்கள்.

த.வெ.க அவருக்கு மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பதவி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் போன்ற விஷயங்களைக் குறித்து கட்சித் தலைவரோடு விரைவில் கலந்து உரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  சென்னையில் தங்கம் விலை பாய்ந்தது! சவரனுக்கு ரூ.1760 உயர்வு!