Home » துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தலைசிறந்த போர் விமானம் விபத்து!

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தலைசிறந்த போர் விமானம் விபத்து!

Tejas fighter jet

துபாய் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியின் போது இந்தியாவின் தலைசிறந்த விமானப்படையை சேர்ந்த தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்தானது.

மக்கள் அனைவரும் விமான சாகசங்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது வானத்திலிருந்து சுழன்று கொண்டே மேலே சென்ற விமானம் திடீரென கீழே தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

கீழே விழுந்ததில் விமானத்தின் பாகங்கள் அனைத்தும் வெடித்து சிதறன. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த விபத்தின் காரணம் என்னவென்று தெரியாத நிலையில், இது குறித்து விசாரிக்க தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் 97 தேஜஸ் விமானங்களை தயாரித்து வழங்க கோரி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மற்றும் தலைசிறந்த போர் விமானம் என்ற பெருமையை பெற்றது தேஜஸ் விமானம்தான். இதேபோன்று கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் பகுதியில் தேஜஸ் விமானம் முதன்முறையாக விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஊட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி – மீண்டும் மலை ரயில் சேவை!