தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது அரசியல் களத்தில் தன்னை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் அவரின் அரசியல் பயணத்துக்கு இணையான ஒரு திரை வடிவம் போல் ரசிகர்கள் காண்கிறார்கள். இதனால் ஜனநாயகன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில், ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
‘தளபதி கச்சேரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், விஜயின் ரசிகர்களுக்கான ஒரு உணர்ச்சிமிகு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். விஜய், அனிருத், அறிவு மூவரும் இணைந்து பாடிய இந்த பாடல் உற்சாகம், மாஸ் என ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் ரசிகர்கள் தற்போது இந்த பாடலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். #JananayaganFirstSingle மற்றும் #ThalapathyVijay போன்ற ஹாஷ்டாக்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ஜனநாயகன் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
