Home » விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை – நடிகர் அஜித் குமார் விளக்கம்!

விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை – நடிகர் அஜித் குமார் விளக்கம்!

Vijay-Ajithkumar

நடிகர் அஜித் குமார், தனது சமீபத்திய பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், தாம் எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் அளித்த ஆங்கில பேட்டியில், கரூர் கூட்ட நெரிசல் விபத்தைப் பற்றி அவர் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் அதை விஜய்க்கு எதிரானதாகவும், சிலர் ஆதரவாகவும் கூறினர். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைக்கு அஜித் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

அஜித் கூறியதாவது, “என் பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை அளிக்க வேண்டிய இடத்தில் சிலர் தங்களது அஜெண்டாவுக்காக பயன்படுத்தினர். நான் நேர்மறையான எண்ணத்துடன் வாழ விரும்புகிறேன். எந்த உள்நோக்கமோ திட்டமோ எனக்கு இல்லை,” என்றார்.

அவர் மேலும், “கரூர் விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு நாமெல்லாருமே பொறுப்பானவர்கள். ஊடகங்களும், ரசிகர்களும் விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.

சில ஊடகங்கள் தனது கருத்தை தவறாகப் புரிந்துகொண்டதாகவும், சமூகத்தில் நச்சு கலந்த நிலையை உருவாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, “என் பேட்டியை விஜய்க்கு எதிராக காட்ட முயற்சிக்காதீர்கள். நான் எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைத்து வந்தேன், வாழ்த்தி வந்தேன்,” என்று கூறிய அஜித்தின் விளக்கம் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read  மொந்தா புயல்: ஆந்திரா–ஒடிசா இடையே கரையை கடக்கவுள்ளது!