குஜராத் அகமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம்! கணவனை கொன்ற மனைவி உடலை சமையலறையில் புதைத்தது – போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பீகாரை சேர்ந்த சமிர் அன்சாரி மற்றும் அவரது மனைவி ரூபி ஆகியோர் 2016ல் அகமதாபாத்தில் குடியேறினர். இருவரும் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை செய்து, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.
சில மாதங்களாக சமிர் காணாமல் போனாலும், மனைவி ரூபி எந்த புகாரும் அளிக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அவர் வேறு இடத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார் என கூறி வந்தார்.
ஆனால் ரூபியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அயலவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ரூபிக்கு இம்ரான் வகேலா என்ற நபருடன் கள்ள உறவு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், இருவரும் சேர்ந்து சமிரை கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி சமையலறையில் புதைத்தது வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் உடலை மீட்டு நீதிமருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை மிஞ்சும் இச்சம்பவம் சமூகத்தில் கள்ளக்காதல் எவ்வளவு ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.
