Home » அரசு பள்ளி ஆசிரியர் போக்ஸோ வழக்கில் கைது; மாணவிகள் புகார்!

அரசு பள்ளி ஆசிரியர் போக்ஸோ வழக்கில் கைது; மாணவிகள் புகார்!

Government school teacher arrested in POCSO

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டினப்பள்ளி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் பணியாற்றும் அரசு ஆசிரியர் முருகேசன் மீது மாணவிகள் பலர் குற்றச்சாட்டு முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவிகள் அளித்த புகாரில், ஆசிரியர் அவர்கள் மீது தவறான நடத்தை மேற்கொண்டதாக புகார் பெட்டியில் எழுதி வைத்திருந்தனர். ஆனால் அந்த புகாரை தலைமை ஆசிரியர் கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த தகவல் பெற்றோரிடம் சென்றதும், அவர்கள் கடும் கோபம் அடைந்தனர். பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

அதிகமானோர் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமாளித்தனர்.

போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். மாணவிகள் தெரிவித்ததை உறுதிப்படுத்திய பிறகு, ஆசிரியர் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை இல்லாமை கேள்விக்குறியாகியுள்ளது.

Also Read  டெல்லி கார் வெடிப்பு: டாக்டர் உமர் பதற்றத்தில் தவறு செய்தாரா?