Home » கோவை கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம்.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு

கோவை கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம்.. 3 பேர் சுட்டுப் பிடிப்பு

3 people shot and arrested

கோவை விமான நிலையம் அருகே கார் நிறுத்தி பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை, மதுபோதையில் இருந்த 3 பேர் தாக்கி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

வெளிச்சமில்லா பகுதி என்பதை குறிவைத்து மூன்று பேர் கார் கண்ணாடி உடைத்து, ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி மயக்கமடையச் செய்து மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மாணவி மீதான பாலியல் வன்முறை நடந்து, குற்றவாளிகள் தப்பியோடினர்.

மயக்கத்தில் இருந்த ஆண் நண்பர் அதிகாலை 2 மணிக்கு சற்றும் உணர்ந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். பீளமேடு போலீசார் விரைந்து வந்து மாணவியை தேடி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துடியலூர் அருகே பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் கண்டறிந்தனர்.

போலீசாரை தாக்கி தப்ப முயன்ற அவர்களுக்கு போலீசார் காலில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்தி காளிஸ்வரன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read  ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மோசடி – ‘டிஜிட்டல் கைது’ கும்பல் சிக்கியது!