Home » உலக கோப்பை – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

உலக கோப்பை – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

womens world cup - India win

மகளிர் உலக கோப்பை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. சஃபாலி வர்மா 87, தீப்தி சர்மா 58 ரன்கள் சேர்த்தனர்.

299 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் எடுத்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை.

இந்திய பந்து வீச்சில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளுடன் சிறப்பாக விளங்கினார். சஃபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றியால் இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலக கோப்பை வென்றுள்ளது.

வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read  இந்தியா vs ஆஸ்திரேலியா – 3வது ஒருநாள் போட்டிக்கு மழை தடையாகாது!