மூன்றாவது T20 போட்டி ஹோபார்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி விரைவில் விக்கெட்டுகள் இழந்தது.
டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும் வெளியேறினர். மிட்செல் ஓவன் மற்றும் ஜோஸ் இங்கிலீஷும் குறைந்த ரன்களில் பெவிலியன் சென்றனர். ஆனால் டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டம் காட்டினர்.
டிம் டேவிட் 38 பந்துகளில் 74 ரன்களும், ஸ்டோனிஸ் 39 பந்துகளில் 64 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 186 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அர்ஷ்டீப் 3 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தனர்.
187 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 25 ரன்கள், சூர்யகுமார் 24 ரன்கள், கில் 15 ரன்கள், அக்சர் பட்டேல் 17 ரன்கள் எடுத்தனர். திலக் வர்மா 29 ரன்கள் சேர்த்தார்.
முக்கியமான தருணத்தில் வாஷிங்டன் சுந்தர் சூப்பர் ஃபினிஷரைப் போல் ஜொலித்தார். 23 பந்துகளில் 49 ரன்கள், அதில் 4 சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரி அடங்கும். ஜித்தேஷ் சர்மா 22 ரன்கள் உதவியுடன் இந்தியா 18.3 ஓவரில் இலக்கை எட்டியது.
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. அடுத்த நான்காவது T20 போட்டி வியாழக்கிழமை நடைபெறும்.
