Home » கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து

கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து

Ajith Kumar Interview

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, இந்நிலையில் ஒரே ஒருவரை குறை கூறுவது தவறு என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார்.

தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “நம் அனைவருக்கும் பங்கு உண்டு” என குறிப்பிட்டார். கூட்டத்தை அதிகரிப்பதையே பெருமை என பார்க்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கிரிக்கெட் போட்டிகளில் கூட்டம் கூடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் வருவதில்லை என எடுத்துக்கூறிய அவர், திரையரங்குகள் மற்றும் நடிகர்களை காண மட்டுமே ஏன் இத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன என கேள்வி எழுப்பினார்.

ஒரு சிலரின் செயலால் திரைத்துறைக்கு மொத்தமாக களங்கம் ஏற்படுகிறது என்பது வேதனைக்குரியது என அஜித் தெரிவித்தார். ரசிகர் அன்பை வெளிப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கின்றன என்றும் அவர் நினைவூட்டினார்.

திரைப்பட பிரபலங்களை காண தாறுமாறாக கூட்டம்கூடும் நடைமுறையை நிறுத்தி, ஒழுங்கான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அவர் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு ரசிகர்கள், ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

Also Read  அலுவலக பேனரை மாற்றிய செங்கோட்டையன் - காரிலும் த.வெ.க!