Home » 17 குழந்தைகளைப் பிடித்த இயக்குநர்! என்கவுன்டரில் சுட்டுக்கொலை

17 குழந்தைகளைப் பிடித்த இயக்குநர்! என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Director kidnapped 17 children

மும்பையில் உள்ள படப்பிடிப்பு ஸ்டுடியோவில் 17 சிறுவர் சிறுமிகளை பிணக்கைதிகளாக வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநர் ரோகித் ஆர்யா (50) போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆடிஷன் என்ற பெயரில் குழந்தைகளை அழைத்துச் சென்ற ரோகித் ஆர்யா, ஆர்.ஏ. ஸ்டுடியோவில் அவர்களை அடைத்து வைத்து விடியோவில் தாம் தீவிரவாதி அல்ல என்றும், பணம் நோக்கம் கிடையாது என்றும் கூறினார்.

சிலருடன் பேச வேண்டும், கோரிக்கை ஏற்காவிட்டால் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பேன் என மிரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் பேச்சுவார்த்தைக்கு முயன்றும் அவர் ஒத்துழைக்கவில்லை. பாத்ரூம் வழியாக போலீஸ் அணி உள்ளே நுழைந்து நடவடிக்கை மேற்கொண்டது.

சரணடைய உத்தரவிட்ட போலீசாரிடம் ரோகித் ஆர்யா துப்பாக்கி காட்டி மிரட்டியதால், என்கவுன்டரில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மகாராஷ்டிரா அரசின் ‘மாஜி சாலா, சுந்தர் சாலா’ கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் ரோகித் ஆர்யா என கூறப்படுகிறது. அரசின் அங்கீகாரம் மற்றும் ஊதியம் வழங்கப்படாததால் மன உளைச்சலில் இந்த செயலுக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  டெல்லி கார் வெடிப்பு: டாக்டர் உமர் பதற்றத்தில் தவறு செய்தாரா?