தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், அரசியல் தீர்மானங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நிகழ்வுக்குப் பிறகு அமைதியாக இருந்த விஜய், சமீபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது பல்வேறு நிவாரண உறுதிமொழிகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே நேரத்தில், தவெகவின் முதல் நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெற்றது. அதன் பின், அடுத்த அரசியல் திட்டங்களைப் பற்றி முடிவு செய்ய விஜய் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி உள்ளார்.

வெளியிட்ட அறிக்கையில் விஜய், “சூழ்ச்சிகளையும் சவால்களையும் மீறி தமிழ்நாட்டு மக்களுக்காக நம் வெற்றிப் பயணத்தைத் தொடரும் தருணம் இது” என கூறியுள்ளார்.
மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டம், தவெகவின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

 
			 
			