Home » IND vs AUS: மழை தடை! முதல் டி20 போட்டி ரத்து

IND vs AUS: மழை தடை! முதல் டி20 போட்டி ரத்து

Ind vs Aus T20 Cancel

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 14 பந்துகளில் 19 ரன்கள், கில் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தனர்.

மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

சூரியகுமார் யாதவ் வேகமாக விளையாடி 24 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். இந்திய அணி 9.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

ind vs aus 1st t20

அதே நேரத்தில் மீண்டும் பெய்த மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை காரணமாக போட்டி முடிவுக்கு வரவில்லை.

அதனால் வெற்றி தோல்வி இன்றி முதல் டி20 ரத்து செய்யப்பட்டது. தொடரின் இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை மெல்போர்னில் நடைபெறுகிறது.

Also Read  ருதுராஜின் நெகிழ்ச்சி செயல்: ஷாவுடன் விருது பகிர்வு!