அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‛டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் ₹90 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை ஏற்படுத்தியது. இதனால், இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான் விலையுயர்ந்த பிஎம்டபுள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும் ரசிகர்கள், திரையுலகத்தினர் இருவரும் அபிஷனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது முதல் படத்திலேயே இப்படியான பெருமை பெற்றது குறித்து அவர் மிகுந்த நன்றியையும் பகிர்ந்துள்ளார்.
தற்போது, அதே தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட அபிஷன், சென்னையில் வளர்ந்தவர். திரைப்படம் வெளியான பின் நடந்த வெற்றி விழாவில் தனது தோழி, காதலி அகிலாவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திரையுலகில் புதிதாக அடியெடுத்து வைத்த அபிஷனுக்கு கிடைத்த இந்த வெற்றி, எதிர்காலத்தில் அவரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 
			 
			