இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை (அக்டோபர் 29) நடைபெற உள்ளது. இந்தப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும், எந்த மைதானத்தில் நடக்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் காணலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தற்போது தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தொடரில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், திலக் வர்மா, சிவம் துபே உள்ளிட்ட இளம் வீரர்கள் விளையாடவிருக்கின்றனர். 2026 டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு அணியின் இறுதி வடிவை தேர்வு செய்யும் முக்கிய வாய்ப்பாக இந்த தொடர் கருதப்படுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வலிமையான அணியாக களம் இறங்குகிறது. முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் கான்பெரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும். டாஸ் மதியம் 1.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக போட்டியைப் பார்க்கலாம்.
ஓடிடி மூலம் பார்க்க விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையாக காணலாம். ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஃபாக்ஸ் கிரிக்கெட் சேனல் வழியாகப் பார்க்க முடியும். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்க இருப்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
