தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்படங்களுக்குப் புறம்பாக பல்வேறு துறைகளில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். கார் ரேஸிங், ட்ரோன்கள், பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அஜித்தின் ஈடுபாடு அனைவருக்கும் தெரிந்ததே.
சமீபத்தில் அவர் தனது நெஞ்சில் கடவுளின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது அஜித் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது.
அந்த வீடியோவில் அஜித், முழு கவனத்துடன் குறியை நோக்கி துப்பாக்கி சுடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரின் மனோதிடமும் திறமையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை அஜித்தின் மேலாளர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த சில மணி நேரங்களுக்குள், அது ஆயிரக்கணக்கான லைக்குகளும் கருத்துகளும் பெற்று வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பில் இல்லாத நேரத்திலும் தன் ஆர்வங்களில் தீவிரம் காட்டும் அஜித்தின் இந்த புதிய வீடியோ, மீண்டும் ஒருமுறை அவர் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார் என்பதற்கான சான்றாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

 
			 
			