Home » மூன்று படங்களும் 100 கோடி கிளப் – பிரதீப் ரங்கநாதன் சாதனை!

மூன்று படங்களும் 100 கோடி கிளப் – பிரதீப் ரங்கநாதன் சாதனை!

Dude Pradeep Ranganathan

இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘Dude’ திரைப்படம், வெளியான எட்டாவது நாளிலேயே உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இயக்குநராக அறிமுகமான லவ் டுடே படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அந்த படம் 100 கோடி வசூல் செய்தது அவரை நாயகனாக உயர்த்திய முக்கிய காரணமாக அமைந்தது.

அதன்பின் அவர் நடித்த டிராகன் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் 100 கோடியை கடந்த வசூல் செய்த அந்த படம், பிரதீப் ரங்கநாதனின் வெற்றிச் சரித்திரத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான Dude படம் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தபோதிலும், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பாதையில் பாய்கிறது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, Dude வெறும் 8 நாட்களில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், பிரதீப் ரங்கநாதன் தனது முதல் மூன்று படங்களிலும் 100 கோடி கிளப்பில் சேரும் சாதனையை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் மூன்று படங்களிலேயே தொடர்ச்சியாக 100 கோடி வசூல் செய்த நாயகனாக பிரதீப் ரங்கநாதன் உருவாகியிருப்பது, அவரை அடுத்த தலைமுறை பாக்ஸ் ஆபிஸ் கிங் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Also Read  துப்பாக்கியுடன் அதிரடி காட்டிய அஜித் – வைரல் ஆன வீடியோ!